Followers

Tuesday, March 13, 2018

0 நள்ளிரவு முதல் வைபர் இயங்கும்!

இன்று நள்ளிரவு முதல் வைபர்(Viber) இலங்கையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏனைய வலையமைப்புகள் வெள்ளிக்கிழமை முதல் இயங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்படிரு
ந்தமை குறிப்பிடத்தக்கது.

0 குளியல் தொட்டிக்குள் மூழ்கி உயிரிழந்த சிறுவன்: விசாரணைகள் தீவிரம்

நடிகை ஸ்ரீதேவி போன்று கனடா சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் குளியல் தொட்டிக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
கடந்த சனிக்கிழமை ரொறன்ரோவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் லேக் லூயிஸ் பகுதியிலுள்ள கோல்டன் எனப்படும் நகரில் உள்ள சுடுநீர் நிரம்பிய குளியல் தொட்டிக்குள் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து பொலிஸார் தெரிவிப்பதாவது, சிறுவனின் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தோன்றவில்லை எனவும் இச்சிறுவன் எவ்வாறு உயிரிழந்தார் என்பதை கண்டறிய வேண்டும் எனவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் இச்சிறுவனின் இறுதிக் கிரியைக்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

0 பேஸ்புக் தடையை நீக்குவதற்கு நிபந்தனை விதித்துள்ள இலங்கை அரசு

பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவை மேற்கோள்காட்டி, சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. பேஸ்புக் மீதான தடை அரசியல் சார்ந்த விடயம் இல்லை.
ஆனாலும் இனவாதத்தை தூண்டும் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையான பதிவுகளை தொடர்ந்து இடம்பெற அனுமதிக்க முடியாது.
இந்தவிடயத்தில் பேஸ்புக் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.
அந்த நிறுவனம் வழங்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த தடையை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

0 மீண்டும் தள்ளி போகிறது 2.0? காரணம் இதுதான்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அக்ஷய் நடிக்கும் 2.0 படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடந்துவருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் VFX காட்சிகளுக்காக பணியாற்றிவந்த ஒரு பிரபல அமெரிக்க நிறுவனம் தற்போது திவாலாகியுள்ளது. அதனால் தற்போது வேறொரு புதிய கம்பெனிக்கு அந்த பணிகளை ஒப்படைக்கலாமா என படக்குழு பரிசீலித்து வருகிறதாம்.
அதனால் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என எதிரிபார்க்கப்பட்ட 2.0 மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் தீபாவளி அல்லது அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் வெளியாகலாம் எனவும் 

Monday, March 12, 2018

0 கண்டி வன்முறையினால் இலங்கை பொருளாதாரத்திற்கு விழுந்த அடி!

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதில் பெரிய பாதிப்பு கொழும்பு பங்குச்சந்தைக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொழும்பு பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு அதிக விருப்பம் தெரிவிப்பதில்லை என பங்கு சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கண்டி மற்றும் அம்பாறை பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமையவே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டவுடன் கொழும்பு பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் வைப்புகளை மீளவும் பெற்று கொண்டுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.
அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் நிறைவு கொழும்பு பங்க சந்தையில் சற்று பின்னடைவை சந்திக்க முடிந்துள்ளது.
அதற்கமைய தங்கள் பங்கு சந்தை தரவில் 3.46 வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அது நூற்றுக்கு 0.05% வீத வீழ்ச்சியாகும்.
கடந்த வாரத்தில் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளினால் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையும் குறைவடைந்தது. அதேபோன்று வர்த்தக நிறுவனங்கள் பல தாக்கப்பட்டமையினால் அதுவும் பொருளாதாரத்தை பாதித்திருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

0 சீகிரியா குகை தொடர்பான இரகசியங்கள் அம்பலம்!

சீகிரிய வரலாறு தொடர்பில் முக்கிய பல தகவல்கள் தொல்பொருள் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீகிரிய கற்களை மையமாக கொண்டு அதனை சுற்றி ஓடும் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்விலேயே இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் வடிவியல் இயல்பினை சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அகழ்வு நடவடிக்யைின் போது அங்கு சிங்கத்தின் உருவம் ஒன்று கிடைத்ததாக மத்திய கலாச்சார நிதியத்தின் இயக்குனர் பிரிஷாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த சிங்கத்தின் உருவத்தை அவதானிக்கும் போது, தற்போது சீகிரியாவில் அமைந்துள்ள சிங்கத்தின் பாதத்தின் மேல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, உருவம் எந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும்.
அத்துடன் அதன் கட்டடக்கலை மற்றும் கட்டமைப்பு கலை தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியும் என இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உள்ள சிங்கத்தின் பாதத்தின் மேல் பகுதியில் உள்ள சிங்கத்தின் உருவத்திற்கு சில மர கலப்புடனான களிமண் கலவை கலந்து கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தண்டனை

யாழில். சிறுமி ஒருவரை கடத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன், குற்றவாளிக்கு உதவிய குற்ற சாட்டில் அவரது நண்பர் ஒருவருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையையும் நீதிபதி விதித்துள்ளார்.
வடமராட்சி, வல்வெட்டித்துறையில் 2014ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 13 வயதுச் சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விசாரணைகள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன.
அதன் நிறைவில் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்குக் கோவைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.
முதலாவது சந்தேநபருக்கு எதிராக கடத்தல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டும், இரண்டாவது சந்தேகநபருக்கு எதிராக கடத்தல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு சட்ட மா அதிபரால் யாழ். மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்குக்கு தீர்ப்புக்காக எடுத்து கொள்ளப்பட்டது.
“முதலாவது எதிரி சிறுமியைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார். இரண்டு குற்றங்களுக்காகவும் முதலாவது எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்.
தண்டமாக 5 ஆயிரம் ரூபா செலுத்தவேண்டும். அதனை செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
இரண்டாவது எதிரி, சிறுமியைக் கடத்திச் செல்ல முதலாவது எதிரிக்கு துணை நின்றுள்ளார். அதற்கு அவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.
அந்தத் தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அத்துடன், 5 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தவேண்டும்.
அதனைச் செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பை வழங்கினார்.