அதிலே இரண்டு தெரிவுப்பெட்டிகள் காணப்படும்.அதில் முதலாவதாக காணப்படும் Install files for complex script and right-to-left languages [including Thai] என்பதை தெரிவுசெய்து, கீழே உள்ள Apply பொத்தானை அழுத்தவும்.
இப்போது உங்கள் கணனிக்கு சில கோப்புகள் பதிவேற்றப்படும்.
பின் கணனியை மீள்ஆரம்பிக்கும்படி(Restart) கேட்கப்படும்போது மீள்ஆரம்பித்து(Restart செயது), மீண்டும் Control Panelல் Regional and Language Optionsல் இரட்டைசொடுக்கு செய்ய தோன்றும் புதிய சாளரத்தில் Languages என்பதை தெர்வு செய்யவும்.
பின் அப்பக்கத்தில் காணப்படும் Details… பொத்தானை அழுத்தவும்.
அப்போது தோன்றும் புதிய சாளரத்தில் Add… பொத்தானை அழுத்தி, தோன்றும் Add Input Language எனும் புதிய சாளரத்தில்,
Input Language: எனும் தெரிவில் தமிழையும், Keyboard Layout/IME: என்பதிலும் தமிழையும் தெரிவு செய்து OK பொத்தானை அழுத்தி சாளரத்தை மூடவும்
பின் மற்றய சாளரங்களையும் Apply செய்து, Ok செய்து மூடவும்.
இப்போது உங்கள்கணனியில் ஒருங்குறி முறையில் தமிழ் தட்டச்சு செய்ய முடியும்.
உங்கள் கணனித்திரையின் அடிச்சட்டத்தில் கீழே படத்தில் காட்டப்பட்டவாறு EN என்று காணப்படும்.
அதில் சொடுக்கினால் படத்தில் காட்டப்பட்டவாறு தமிழ்,ஆங்கிலம் என இருமொழித் தெரிவினை காட்டும்.அதில் தமிழ் என்பதை தெரிவு செய்தபின்னர் தமிழில் தட்டச்சு செய்யலாம்.
தட்டச்சு முறை
D=அ E=ஆ F=இ R=ஈ G=உ T=ஊ Z=எ S=ஏ W=ஐ ~=ஒ A=ஓ Q=ஔ
k=க U=ங ;=ச ]=ஞ '=ட C=ண l=த v=ந h=ப c=ம /=ய j=ர n=ல N=ள J=ற b=வ B=ழ V=ன
k+d=க்
k=க
k+e=கா
k+f=கி
k+r=கீ
k+g=கு
k+t=கூ
k+z=கெ
k+s=கே
k+w=கை
k+`=கொ("`"இந்த" ~ "விசையாகும்-!குறிக்கு முன்னால் உள்ளது)
k+a=கோ
k+q=கௌ
2 Comments
பிழை அல்லது சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடவும்.
ReplyDeleteமிக்க நன்று
ReplyDelete