Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கை செல்ல விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அகதிகள்


தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளில் ஒரு இலட்சம் பேர் தாய்நாடு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மண்டபம், மதுரை, சென்னை உள்ளிட்ட, 125 முகாம்களில் மூன்று இலட்சம் பேர் அகதிகளாக தங்கியுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக சுமார் ஐந்து இலட்சம் இலங்கையர்கள் இராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமுக்கு வந்தனர்.
இவர்களில் மூன்று இலட்சம் பேரே தற்போது முகாம்களில் தங்கியுள்ளனர்.
தற்போதைய காலக்கட்டத்தில் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து இயல்பு நிலை திரும்பியதால் தாய் நாடு செல்ல அவர்கள் விரும்புவதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு இலட்சம் அகதிகள் இலங்கை செல்ல விருப்ப மனு கொடுத்துள்ளதால், இவ்வாண்டு இறுதிக்குள் தூத்துக்குடியில் இருந்து அவர்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Post a Comment

0 Comments

Followers

ADD2

Recent Comments