தற்போது நடைமுறையில் உள்ள சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக, அடுத்த இரண்டு நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்று சிறிலங்காவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
“இந்தத் தடை நீக்கம் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது.ஏனென்றால், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு, சிறிலங்கா அதிபரின் கீழ் உள்ளது.
எனினும் இந்த அதிபர் செயலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் இதுபற்றி நாம் கூறுவோம்.
இந்த தடையினால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவேன்.
எனினும், அதனை விட, தேசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனைகள் முக்கியமானவை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments