உலகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த பொருள் தான் இஞ்சி.
இத்தகைய இஞ்சியை தேனுடன் சேர்த்து உட்கொண்டால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
வயிற்றில் உள்ள அதிகப்படியான வாயுவை வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும், அஜீரண பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டால், உணவு உட்கொண்ட பின் தேனில் ஊற வைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிட்டால் செரிமானம் சிறப்பாக நடைபெறும்.
இருமல் மற்றும் சளி
இஞ்சி சுவாச பாதையில் உள்ள தொற்றுக்களை சரிசெய்வதோடு, சளி முறிவதற்கு உதவியாக இருக்கும்.
இஞ்சியில் உள்ள வெப்பமூட்டும் பண்புகள், இறுகி உள்ள சளியை இளகச் செய்து வெளியேற்றும். சளி, இருமலால் கஷ்டபடுபவர்கள் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடலாம்.
புற்றுநோயைத் தடுக்கும்
மருத்துவ ஆராய்ச்சியில் இஞ்சி புற்றுநோயைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது
எனவே தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிட்டால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.
ஆஸ்துமா
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு இஞ்சி நல்லது.
இஞ்சியை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வரலாம். இது சுவையாக இருப்பதுடன், ஆஸ்துமா பிரச்சனைக்கும் தீர்வளிக்கும்.
இரத்த சர்க்கரை அளவு குறையும்
இஞ்சி உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். இதனால் சர்க்கரை நோய் வருவதற்கான அபாயமும் குறையும். எனவே சர்க்கரை நோய் வராமல் இருக்க தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடலாம்.
இதயம் பலமாகும்
இஞ்சியில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.
இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தேனில் ஊற வைத்த இஞ்சியை தினமும் சிறிது சாப்பிடலாம்
உடல் எடை
எடையைக் குறைக்க இஞ்சி தேன் கலவை பெரிதும் உதவியாக இருக்கும்
அதிலும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த இஞ்சியை சாப்பிடலாம் அல்லது இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்தும் குடிக்கலாம்.
0 Comments