எமது கணினி இயங்குவதற்கு இயங்கு தளத்திற்கு அடுத்தபடியாக தேவைப்படுவது எமது கணினியில் உள்ள வன்பொருட்களை இயக்க உதவும் பகுப்புறுப்பு செயற்பாட்டு மென்பொருளாகும்(Driver Software). இம்மென்பொருட்கள் நிறுவப்பட்டால்தான் சத்தம்,ஒளித்தெளிவு, காணொளி உள்வாங்கி என ஒவ்வொரு செயற்பாடும் நடைபெறும்.
இம்மென்பொருட்கள் கணினி வாங்கும்போது தரப்படும் தாய்ப்பலகை இறுவட்டுடனும், மற்றும் தனியாக வன்பொருட்களை வாங்கும் போது தனி இறுவட்டாகவும் கிடைக்கும்.
ஆனால் சில நேரங்களில் நாம் இம் மென்பொருள் இறுவட்டுக்களை பழுதுபடுத்தி இருப்போம் அல்லது தொலைத்து இருப்போம். மற்றும் பழைய கணினிகளை வாங்குபவர்களுக்கும் , திருட்டு சந்தையில் கணினி, மடிக்கணினி வாங்குவபவர்களுக்கும் இம்மென்பொருள் இறுவட்டு இல்லாமலே வாங்கவேண்டி இருக்கும்.
இவ்வாறான கணினிகளுக்கு இயங்குதளம் மீள்நிறுவிய பின்னர் இப்பகுப்புறுப்பு செயற்பாட்டு மென்பொருட்களை தரவிறக்க இணையத்தில் சென்று தேடி அலைந்தாலும் சரியான சுட்டிகள் கிடைப்பதில்லை ஏமாற்றமே மிஞ்சும்.
இத்தொல்லைகளை நீக்கும் வைத்தியர்தான் இந்த Device Doctor மென்பொருள். இம்மென்பொருளை நிறுவிய பின் வருடலினை(Scan) கொடுத்தால் எமது கணினிக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் மேம்படுத்த வேண்டிய பகுப்புறுப்பு செயற்பாட்டு மென்பொருட்களை பட்டியலிடும்.
அதில் எமக்கு தேவையானதை சொடுக்கினால் தரவிறக்க சுட்டி உள்ள பக்கத்திற்கு செல்லும். அவற்றை தரவிறக்கி கணினியில் நிறுவினால் போதுமானது. எமது கணினியின் செயற்படாத வன்பொருட்கள் செயற்பட ஆரம்பித்துவிடும்.
இம்மென்பொருளை தரவிறக்க.
1 Comments
நல்ல தகவல் .....
ReplyDeleteஅருமை