கண்டி நிர்வாக மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய பதற்ற நிலை தணிந்து தற்போது இயப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
கண்டியின் சில பகுதிகளில் ஏற்பட்ட இனவாத தாக்குதல் சம்பவம் காரணமாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டிருந்தது.
மூன்று நாட்களாக தொடர்ந்து மேற்கொண்ட இனவாத தாக்குதல் காரணமாக கண்டி மாவட்டம் மொத்தமாக செயலிழந்திருந்தது.
தற்போது அமைதி நிலை ஏற்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள் அடங்கிய சிசிரிவி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
அதில் ஆண்களுடன் இணைந்து பெண்ணொருவர் பள்ளிவாசலை உடைக்கும் காட்சி அடங்கிய காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நாட்களாக நிலவிய வன்முறை சம்பவங்கள் காரணமாக 20 வரையிலான பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments