இணையத்தை பயன்படுத்தி, இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில், பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மினுவங்கொடை, ஹோமாகம பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இருவர், கடந்த வெள்ளி, மற்றும் சனிக்கிழமை (மார்ச் 09,10) ஆகிய தினங்களில், இவ்வாறு இன முறுகலை ஏற்படுத்தும் செயற்பாட்டை மேற்கொண்டமை தொடர்பில், குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், இன்றைய தினம் (11) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி வரை, மாகொல இளைஞர் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வு பிரிவினரால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் உடக பேச்சாளர் தெரிவித்தார்.
0 Comments