கடந்த சில தினங்களாக கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கலகம் காரணமாக சேதமடைந்த சொத்துகள் தொடர்பில், இதுவரை பொலிசில் முறைப்பாடு செய்யாதோர் இருப்பின் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர், ருவன் குணசேகர விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த சொத்து அமைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாட்டை மேற்கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் ஏற்பட்ட அமைதியற்ற சூழல் காரணமாக, கடந்த செவ்வாய்க்கிழமை (06) முதல் மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும், நாளை திங்கட்கிழமை (12) முதல் திறக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கண்டியில் தற்போது மிக அமைதியான சூழல் நிலவுகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளதோடு, கலவரம் தொடர்பில் நாடு முழுவதும் 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 Comments
If you are searching for Mobiles customer care number, then don’t worry. Here we will provide you every detail of all network operators. From Aircel, Vodafone, Idea to BSNL Customer Care Number, you will get it here. Get Toll-Free Numbers of every mobile network operator.
ReplyDeletemtnl customer care number
airtel dth customer care number