Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

512ஜிபி உள்ளடக்க சேமிப்பு; 6ஜிபி ரேம் உடன் samsung s9 and s9+.!?

எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் விரைவில் தொடங்கப்படும் என்பது ஒரு நன்கு அறியப்பட்ட உண்மையாகிவிட்ட நிலைப்பாட்டில் தொடர்ந்து பலவிதமான வதந்திகள் மற்றும் லீக்ஸ் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
சமீபத்தில் வெளியான தகவலானது, வரவிருக்கும் இந்த சாதனங்களின் நினைவக அமைப்பை வெளிப்படுத்துகின்றன. கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் என்னென்ன சேமிப்பு மறுபாடுகளில் வெளியாகும் மற்றும் எப்போது வெளியாகும் என்பதை விரிவாக காண்போம்.

4ஜி ரேம் மற்றும் 128ஜிபி

சீனாவின் விபோ (Weibo) வலைத்தளம் மூலம் வெளியாகியுள்ள ஒரு கசிவின்படி, கேலக்ஸி எஸ்9 ஆனது 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு வரும். உடன் ஒரு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாறுபாடும் வெளியாகும்.

512 ஜிபி உள்ளடக்க சேமிப்பு

மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், 6ஜிபி அளவிலான ரேம் கொண்ட 64ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு விருப்பங்களில் வரும். வெளியான தகவல் உண்மையெனில்சாம்சங் நிறு


மெலிதான மேல் மற்றும் கீழ் பெஸல்

இதற்கிடையில், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலானது கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படம் வழியாக அதன் முன்பக்க குழுவை வெளிப்படுத்தியுள்ளது. வெளியான படத்திலிருந்து இக்கருவிகள் அதன் அதன் முன்னோடியான கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ ஒப்பிடும்போது, மெலிதான மேல் மற்றும் கீழ் பெஸல்களை கொண்டுள்ளது.வனம் 512 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மார்க்கெட்டையும் கொண்டு வரக்கூடும்.

வடிவமைப்பு மொழி

வெளியான இந்த புகைப்பட கசிவானது, முன்னர் வெளியான கேலக்ஸி எஸ்9 தொடர் கருவிகளின் வடிவமைப்பு மொழி பற்றிய பரிந்துரைகளை தாக்க்கவைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முன்பக்க கேமராவுடன் ஒருங்கிணைந்த கருவிழி ஸ்கேனர்

முன்னதாக வெளியான தகவலின்படி, கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவுடன் ஒருங்கிணைந்த கருவிழி ஸ்கேனர் இடம்பெறும். மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்9+ ஆனது ​​ஒரு தனிபட்ட ஐரிஸ் (கருவிழி) ஸ்கேனர் மற்றும் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டு வெளியாகும்.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட்

இந்த சாதனங்களின் சில பிரதான அம்சங்களை பொறுத்தமட்டில், கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆனது ஸ்னாப்ட்ராகன் 845 அல்லது சாம்சங் நிறுவனத்தின் மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்ட எக்ஸிநோஸ் 9810 சிப்செட் கொண்டு இயங்கலாம். மேலும், எஸ்9 மற்றும் எஸ்9+ ஆகிய இரண்டுமே பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் கொண்டு வரும்.





Post a Comment

0 Comments

Followers

ADD2

Recent Comments