Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள்.

உங்கள் கணனியில் நீங்கள் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் கண்காணிக்க பல மென்பொருட்கள் உள்ளன, அவ்வாறான ஓர் மென்பொருள்தான் இந்த பணியாளர் கண்காணிப்பு மென்பொருள்.
  • இந்த மென்பொருளை நிறுவியபின்னர் நிறுவிய கணனியின் செயற்பாடுகள் முழுவதும் பதிவு செய்யப்படும். 

  • நாம் குறிப்பிடும் நேர இடைவெளியில் கணனி திரையினை படமாகவும் சேமிக்கும். 
  • வேறு யாரும் பார்க்காதவாறு கடவுசொல் இடும் வசதியும் உள்ளது.
  • குறித்த நேர இடைவெளியில் சேமித்த தகவல்களை நாம் வழங்கம் மின்னஞ்சலிற்கு அனுப்பிவைக்கும்.
                                                         Tools---->Settings Wizard
  •  மென்பொருள் நிறுவியதற்கான தடயம் ஏதுமின்றி அழித்து விடலாம்.
  • பின்னர் மென்பொருளை நாம் திறந்து பார்ப்பது எனில் Ctrl+Shift+Alt+K இனை அழுத்தி பின் நாம் வழங்கிய கடவுச்சொல்லினை இட்டு திறக்கலாம். (திறப்பதற்கான இந்த குறுக்குவழிவிசைக்கட்டளையை மாற்றலாம்)
  • Run கட்டளையில் "runkgb" என வழங்கியும் திறக்கலாம்.இக்கட்டளையும் மாற்றக்கூடியதே.
மென்பொருளை நிறுவுவதற்கும் ஆரம்பிப்பதற்கும் உங்கள் கணனியில் நிறுவியுள்ள எதிர்வைரசு காப்பை நிறுத்தவேண்டி ஏற்படலாம்.

இம்மென் பொருளை தரவிறக்க.

செயற்படுத்துவதற்கான செயற்பாட்டு இலக்கங்கள் மென்பொருளுடன் வழக்கம்போல இணைத்துள்ளேன்.

மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய கணனியில் நிறுவி அவர்களின் செயற்பாடுகளை மின்னஞ்சல் மூலம் பார்க்கும், தனிமனித சுதந்திரத்திற்கு இடையூறாகவும் இம்மென்பொருள் அமைந்தாலும் அலுவலகங்களில் வேலை செய்யாமல் வெட்டியாய் பொழுது கழிப்பவர்களை மேலதிகாரிகளுக்கு போட்டுக்கொடுக்க இவ்வாறான மென்பொருள்கள் உதவுகின்றன.
 உங்களுக்கு தெரியாமல் உங்கள் கணனியிலும் யாரேனும் இவ்வாறான மென்பொருளை நிறுவியிருக்கலாம். எச்சரிக்கையாய் இருங்கள் , மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதா என்பதை கண்டு பிடிக்க முடியாது.

கருத்துக்களை பின்னூட்டத்தில் போடுங்கள். உங்கள் கருத்துக்கள் தான் இவ்வாறான பதிவுகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

Post a Comment

5 Comments

  1. மிகவும் நல்ல மென்பொருள்
    www.dailypcnews.blogspot.com

    ReplyDelete
  2. உங்கள் வலைமுயற்சியும் நன்றாக உள்ளது. விளக்கங்கள் விரிவாக தமிழில் அளிக்கப்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும். ஏனெனில் ஆங்கிலத்தில் எனில் விரிவாக பல தளங்கள் உள்ளது. எமது தேவை நல்ல தமிழில் வழங்குவதும் பெறுவதுமே. கணனி தொடர்பான தமிழ் கலைச்சொற்கள் தெரியாது எனில் விக்கிபீடியா போன்ற தளங்களில் உள்ளது. அதிலும் இல்லையெனில் நீங்களே அதற்கு பொருத்தமான தமிழ்ச்சொல்லை உருவாக்கிவிடுங்கள். பொருத்தமானது எனில் காலப்போக்கில் அதுவே ஏற்றுக்கொள்ளப்படும்....
    varunjeev@aol.com

    ReplyDelete
  3. மென்பொருளை தரவிறக்க கடவுச்சொல் கேட்கும் போது kanittamil.blogspot.com எனக்கொடுக்கவும்...

    ReplyDelete
  4. உங்களை தொடர்புகொள்ள மின்னஞ்சல் கொடுக்க முடியுமா?

    ReplyDelete
  5. varunjeev@aol.com எனது தொடர்பு மின்னஞ்சல்....

    ReplyDelete

Followers

ADD2

Recent Comments