Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கட்டுப்பாட்டு அமைப்புகள்: PHP பகுதி-3

கட்டுப்பாட்டு அமைப்புகள்-Control Structures
நிரல் ஒன்று எழுதும் போது கட்டுப்பாடுகள் அல்லது நிபந்தனைகளை இட்டு அதற்கமைவாக வெளியீடுகளைப் பெற இவை பயன்படுகின்றன.
i.if-எனில்
ii.else-வேறு
iii.elseif- வேறுஎனில்
v.while-வரை
v.do…while-செய்.....வரை
vi.for-ஆக
vii.foreach-ஒவ்வொன்றுக்காகவும்
viii.break-நிறுத்து
ix.continue-தொடர்
x.switch-தெரிவு
xi.require-
xii. include-
xiii.require_once
xiv. include_once

1.if-எனில்

$a=800;
$b=200;
என இரு மாறிகளில் எது பெரிது என அறிவதாயின், If($a>$b) எனும்- $a பெரிது $b எனில் எனும் நிபந்தனையை பயன்படுத்த முடியும்.

PHP பரிசோதனை நிரல்-8
2.else-வேறு ஒரு நிபந்தனை சரிபார்க்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் நிபந்தனைக்கு ஒரு வெளியீட்டை வழங்குவதற்கு வேறு(else) எனும் நிபந்தனை வழங்கப்படும்.
உதாரணமாக
$a=100;
$b=200;
என இரு மாறிகள் இருப்பின்,
முதலாவதாக if($a>$b) என்பதில் a யானது b யை விட பெரிது எனில் “A பெரிதாக உள்ளது” என்று வழங்குவோம். a யானது b யை விட சிறிது எனில் B பெரிது என வழங்க வேறு என்ற நிபந்தனை பயன்படுத்தப்படும்.

PHP பரிசோதனை நிரல்-9
சமன், சமனன்று என்பதை சரிபார்த்தறிதல் PHP பரிசோதனை நிரல்-10
 
இந்நிரலில் மாறி $a யின் பெறுமதியை மாற்றினால் வெளியீட்டில் A பிழையானது எனக்காட்டும். மூன்று மாறிகளில் எது பெரிது என்பதை கண்டறிதல்.  
PHP பரிசோதனை நிரல்-11
[&&] AND -உடன்குறி

இதே நிரலினை (PHP பரிசோதனை நிரல்-11இனை) &&(AND) உடன்குறினை பயன்படுத்தி இன்னும் இலகுவாக எழுதமுடியும்.  

PHP பரிசோதனை நிரல்-12
(if)எனில் கட்டளையை பயன்படுத்தி வாரத்தின் எத்தனையாவது நாள் என்பதை கொடுக்க என்ன கிழமை என்பதை வெளியீடாகத் தரும்படி நிரல் எழுதுதல்.
இந்நிரலில் $a எனும் மாறியின் பெறுமதியை 7 எனும் இலக்கத்துக்குள் மாற்ற அது என்ன கிழமை என்பதை காட்டும்.

Post a Comment

0 Comments

Followers

ADD2

Recent Comments