Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

PHP நிரலை இயக்குவது எப்படி

PHP நிரல்களை எழுதுவதற்கு முன் PHP நிரல் ஒன்றினை எவ்வாறு எழுதுவது, எப்படி சேமிப்பது, எங்கு சேமிப்பது , அதனை எப்படி இயக்குவது என்பவற்றை அறிந்திருப்பது அவசியமாகும். சாதாரணமாக HTML இல் எழுதும் இணைய நிரல்களை Internet Explorer, FireFox போன்றவற்றில் சாதாரணமாக இயக்கி பார்க்க முடியும்.ஆனால் PHP ஆனது பயனரையும் வழங்கியையும்(Server) இணைக்கும் நிரலாக்க மொழி ஆதலால் PHP இயங்குவதற்கு ஓர் வழங்கி தேவைப்படும். இதற்கென பல வழங்கிகள் காணப்படினும் நான் WAMP வழங்கியை இலகு மற்றும் மிகைபயன் கருதி வழங்குகிறேன். முதலில் இச்சுட்டியில் சென்று WAMPதரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவுங்கள். நிறுவிய பின் உங்கள் கணனியில் My Computer ---->Local Disk(C:)-----> wamp-----> சென்று www எனும் கோப்பினை திறந்து அதற்குள் உங்களுக்கு விரும்பிய பெயரில் ஓர் புதிய கோப்பினை (New Folder) உருவாக்குங்கள்.(நான் kanittamil என்றபெயரில் உருவாக்கி உள்ளேன்) இனி நீங்கள் எழுதும் PHP நிரல்களை இந்த கோப்பினுள்ளே சேமிக்க வேண்டும். PHP நிரல் எழுதுதல். உங்கள் கணனியில் உள்ள Notepad ஐ திறந்து
என தட்டச்சு செய்து seve as type என்பதில் All Files என்பதை தெரிவுசெய்து File Name என்பதில் விரும்பிய பெயரிட்டு .php என இட்டு நீங்கள் முன்னர் உருவாக்கிய கோப்பினுள் சேமிக்கவும்.(உ+ம்: C:\wamp\www\kanittamil) இப்பொழுது நீங்கள் எழுதிய நிரல் PHP நிரலாக சேமிக்கப்பட்டுள்ளது. இனி இந்த நிரலினை எவ்வாறு இயக்குவது என்பதை பார்ப்போம்.கணனியின் அடிச்சட்டத்தில் காணப்படும் Wamp வழங்கியிற்கான சுட்டுப்படத்தை சொடுக்கி Start All Services என்பதனை கொடுக்கவும். பின் அதே சுட்டுப்படத்தை சொடுக்கி Localhost என்பதனை சொடுக்கவும். இந்த சாளரம் இதன்போது தோன்றும். இச்சாளரத்தில் நாம் php நிரலை சேமித்த கோப்பினை தெரிவுசெய்து திறக்கவும். பின் நாம் சேமித்த PHP நிரலினை சொடுக்கி திறந்தால் நாம் எழுதிய நிரலின் வெளியீட்டை காணலாம். நிரலின் வெளியீடானது Welcome Kanittamil என்று சாளரத்தில் தோன்றும். PHP நிரல் அடிப்படை கட்டமைப்பினையும் நிரல் எழுதும் விரிவான முறைகளையும் அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Post a Comment

4 Comments

  1. அருமையான தொடர். மிக ஆவலாக எதிர்பார்த்தது. பலருக்கும் பிரயோஜனமாக இருக்கும். எளிய தமிழில் விளக்கமான குறிப்புகள். இப்படி ஒரு தொடர் தமிழில் வராதா என நினைத்திருந்தேன். அதை நீங்கள் செய்து விட்டீர்கள். மிக்க நன்றி

    சந்தேகங்களை கேட்டால் பதில் தருவீர்களா?

    ReplyDelete
  2. colvin நிச்சயமாக பதில் வரும் கேளுங்கள்... கேள்விகளுக்காக பதிவிட்டால் பதிவும் வளம்பெறும்..

    ReplyDelete
  3. வாழ்க வளமுடன் உங்கள் சேவை மேலும் தொடரட்டும்.......................................

    ReplyDelete

Followers

ADD2

Recent Comments