Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாறியின் பெயரிடல் முறை:PHP பகுதி-1

ஒரு PHP நிரலானது
என்ற முடிவினையும் கொண்டமைதல் வேண்டும். ஒரு PHP நிரலில் சொல் ஒன்றை அல்லது வசனம் ஒன்றை வெளியீடாக பெறுவதற்கு எதிரொலி(echo) அல்லது அச்சிடு( print) என்ற அடிப்படை கட்டளை(Syntax) ஆரம்பமாகவும் அதன்பின் ஒர் இடைவெளி விட்டு மேற்கோள்க்குறிக்குள் வெளியீடாகப் பெறவேண்டிய வசனமும் (உதாரணம்:- “ வணக்கம் கணனி உலகே”) பின் முடிவில் அரைப்புள்ளி (;) இட்டு முடிக்கப்பட வேண்டும். echo “வணக்கம் கணனி உலகே”; print “வணக்கம் கணனி உலகே”; PHP பரிசோதனை நிரல்-1
PHP பரிசோதனை நிரல்-2
மாறி-Variable ஓர் மாறும் அல்லது மாறக்கூடிய பெறுமதி மாறி எனப்படும். ஒரு மாறியானது ஆரம்பத்தில் $ குறியீட்டினை கொண்டமைந்து காணப்படும். ஒரு மாறியை PHP நிரலில் எத்தனை தடவை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். உதாரணமாக, $name= வணக்கம் கணனி உலகே; என்பதில் $name என்பது மாறி. மாறியின் பெயரிடல் முறை விசேட குறியீடுகள் தவிர்ந்த எழுத்துக்கள்,இலக்கங்கள் அனைத்தினையும் விசேட குறியீட்டில் அடிக்கோடு(_) என்பதையும் மாறி பெயரிடலில் பயன்படுத்தலாம். மாறி கட்டாயம் எழுத்து ஒன்றில் ஆரம்பிக்கப்பட வேண்டும்.முதலில் இலக்கம் அல்லது (_) வரக்கூடாது. சரியான பெயரிடல் $A $a $fruit12 $names_boys பிழையான பெயரிடல் $4 $20boys $books-15 $new-books $books@story PHP பரிசோதனை நிரல்-3
பரிசோதனை நிரல்-1ல் echo கட்டளையில் “வணக்கம் கணனி உலகே” என்று வழங்கியிருப்போம். ஆனால் பரிசோதனை நிரல்-3ல் “வணக்கம் கணனி உலகே” என்பதை $name என்ற மாறியில் வழங்கி, echo கட்டளையில் $name என்ற மாறியை வாங்கியிருக்கிறோம். இதன் மூலம் “வணக்கம் கணனி உலகே” என்பதற்குப் பதிலாக வேறு ஒரு வசனத்தை வெளியீடாக பெற வேண்டுமெனில் echo கட்டளையில் சென்று மாற்றாமல் $name என்ற மாறியின் வசனத்தை மாற்றுவதன் மூலம் வெளியீட்டினை மாற்றி பெற முடியும்.

Post a Comment

3 Comments

  1. அசத்தல். அடுத்ததடுத்த குறிப்புகளை எதிர்பார்திருக்கிறேன். இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து பதிவிடுங்கள்

    ReplyDelete

Followers

ADD2

Recent Comments