Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

PHP அறிமுகம்

தொடர்ந்து எனது வலைப்பதிவில் இலகு தமிழில் PHP கற்பதற்கான வழிகாட்டலையும் பயிற்சிகளையும் தரவுள்ளேன். அதற்கான அறிமுகமே இப்பதிவு. அடுத்த பதிவில் இருந்து கற்கைகளுக்கான பதிவுகள் இடப்படும். PHP (PHP: Hypertext Pre-processor) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு பொதுநோக்க படிவ நிரலாக்க மொழி (Scripting Language )ஆகும். இது(PHP) வழங்கியல் (server) வழி HTML லில் உள்ளே செலுத்தும் விரிவுரை செய்யப்பட்ட மொழி. PHP திறந்த மூல படிவநிரலாக்க மொழியாகும் (Open Source Scripting Language). மூன்று வகைகளில் இதனை உபயோகப்படுத்தமுடியும். * இணையதளம் அமைப்பதற்கு * மேசைக்கணினி கருவிகள் உருவாக்குவதற்கு * Command line scripting இணைய தளம் அமைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் உலாவியும்(Browser) இணணய வழங்கியும்(Server) சேர நிகழ்நிலை (Dynamic) இணைய பக்கங்கள் உருவாக்கமுடியும். PHP கணினி கருவிகள் உருவாக்குவதற்கு இலகுவானதும் அல்ல பரிந்துரைக்கப்படுவதுமில்லை. PHP யுடன் MySQL சேர்த்து தரவுத்தளத்திற்கானகான நிரலி (Database Program) எழுத முடியும் PHP = Personal Home Page என்று முதலில் இருந்தது. இப்பொழுது அதை (Hyper text Pre-processor) என்று மாற்றி விட்டார்கள். “Hyper text Pre-processor” இந்த வார்த்தையை நன்கு படித்தால் புரியும்.Hyper text - பெரும்பாலும் நாம் இணைய உலாவியை பயன்படுத்தும் பொழுது நீங்கள் உங்கள் URL ஐ உற்றுப் பார்த்தால் அங்கு HTTP:// என்று முகவரிக்கு முன்னால் இருக்கும். HTTP: HYPER TEXT TRANSFER PROTOCOL என்று அழைப்பார்கள். HTTP : இந்த protocol packets ஐ text வடிவத்தில் அனுப்புகிறது. Hyper Text Pre-Processor அந்த text வடிவத்தை உருவாக்குகிறது PHP ஆனது இணைய நிரலாக்கத்திற்கு மிக உகந்ததாகக் கருதப்படுகிறது. இம் மொழியின் நிரற்றொடர்களை HTML பக்கங்களுக்குள்ளேயே பொதிந்து விடலாம். படிவ நிரலாக்க மொழிகள் படிவ நிரலாக்க மொழிகள்(Scripting languages) அல்லது படிவ மொழிகள் என்பன நிரலாக்க மொழிகளுள் ஒரு பிரிவாகும். இவ்வகை மொழிகளின் நிரற்றொடர்த்தொகுப்பு படிவங்கள்(Scripts) என்றழைக்கப்படும். இப்படிவங்கள் வழக்கமாக மெலிதான மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பின்னர் இயக்கப்படும். படிவங்கள்(Scripts) நிரல்களிலிருந்து (Programs) வேறுபட்டவை. நிரல்களை இயக்க இருநிலை மொழியில் உள்ள இயக்கக்கூடிய கோப்புக்களாக நிரந்தரமாக மாற்றினால்தான் இயலும். படிவங்கள் அவ்வாறில்லாமல் எழுதப்பட்ட வடிவிலேயே ஒரு-நிரற்றொடர்-ஒரு-நேரத்தில் என்று மொழிப்பெயர்க்கப்பட்டு இயக்கப்படும். நிரல் மொழிகள் கணினியின் இயக்கத்துக்கு வழங்கப்படும் கட்டளைகளை விபரிக்கும் நிரல்களை கட்டமைக்க பயன்படுகின்றன. இவை வன்பொருளை நேரடியாக கட்டுபடுத்தும் சில்லு மொழி, இடைமொழிகள், பயன்நோக்கு மொழிகள் என பலவகைப்படும். நிரல் மொழிகளை கற்பதன் மூலம் மென்பொறியிலாளர்(Software Engineer) அல்லது நிரலர்(Programmer) ஆகலாம். அதிகம் பயன்பாட்டில் உள்ள நிரல் மொழிகள்(Programming Languages) · C · C++ · PHP · PERL · Java · Python · Visual Basic · ASP · JAVAScript · PASCAL · Ruby · JSP · Perl · Jass · AppleScript · ECMAScript நிரல் மொழிகள் பலவகையாக வகைப்படுத்தப்படும்.அதில் PHP படிவநிரலாக்க மொழி வகையைச் சேர்ந்த மொழியாகும். சில படிவநிரலாக்க மொழிகள்(Scripting Languages) * PHP * JavaScript * ASP * JSP * .NET * ECMAScript * VB Script * Ruby * Python * AppleScript * Jscript * JASS * Perl நிரல் மொழி வகைப்படுத்தல்கள் 1. Array languages 2. Aspect-oriented languages 3. Assembly languages 4. Authoring languages 5. Command line interface languages 6. Compiled languages 7. Concurrent languages 8. Curly-bracket languages 9. Dataflow languages 10. Data-oriented languages 11. Data-structured languages 12. Declarative languages 13. Esoteric languages 14. Extension languages 15. Fourth-generation languages 16. Functional languages 17. Interactive mode languages 18. Interpreted languages 19. Iterative languages 20. List-based languages – LISPs 21. Little languages 22. Logic-based languages 23. Machine languages 24. Macro languages 25. Metaprogramming languages 26. Multiparadigm languages 27. Numerical analysis 28. Non-English-based languages 29. Object-oriented class-based languages 30. Object-oriented prototype-based languages 31. Off-side rule languages 32. Procedural languages 33. Reflective languages 34. Rule-based languages 35. Scripting languages 36. Stack-based languages 37. Synchronous languages 38. Syntax handling languages 39. Visual languages 40. Wirth languages 41. XML-based languages * Variable-மாறி * Value-பெறுமதி * Constant-நிரந்தரமான/மாறாத * Define-வரையறை செய் * Arithmetic-எண்கணிதம் * Logical-தர்க்கரீதியான * Assignment-ஒப்படைப்பு * Comparison-ஒப்பீடு * Relational-தொடர்புடைய * Conditional-நிபந்தனை * Structure-அமைப்பு * Nested-கூட்டப்பட்ட * Loop-மடக்கி * Integer-தொகுவை * Float-மிதவை * Double-இரட்டை * String-சரம் * Case-வகை * Increment-அதிகரித்தல் * Decrement-குறைதல் * Reference-குறிப்பு * Empty-வெறுமையான * Array-வரிசை * Numeric-எண் * If-எனில் * Else-வேறு * While-பொழுது * Each-ஒவ்வொரு * Switch-தெரிவு * For-ஆக * Foreach-ஒவ்வொன்றுக்காகவும் * Function-செயலி * As-போல

Post a Comment

4 Comments

  1. ஃபாலோயர் விட்ஜட் சேருங்களேன் பிளாக்கில..!!!

    ReplyDelete
  2. ஃபாலோயர் விட்ஜட் வசதி எனது வலைப்பூவிற்கு கிடைக்கப்பெறவில்லை... கிடைத்தால் நிச்சயம் சேர்க்கிறேன்...

    ReplyDelete

Followers

ADD2

Recent Comments