Microsoft Office 2007 மென் பொருளை பொதுவாக எல்லோரும் ஆங்கில இடைமுகத்திலேயே பார்த்தும், பாவித்தும் இருப்பீர்கள். அதனை தமிழில் மாற்றி பயன்படுத்துவதற்கு அந் நிறுவனம் தமிழ்மொழி இடைமுகப் பொதியினை வழங்குகின்றது. அப்பொதியினை தரவிறக்கி கணனியில் நிறுவிய பின், கீழ்க்கண்ட செய்கையினை மேற்கொள்வதன் மூலம் தமிழ் இடைமுகத்தினை பெறலாம். தமிழ்மொழி இடைமுகப் பொதியினை இச்சுட்டியில் சொடுக்கி தரவிறக்கவும்.
பொதியினை தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிய பின் Start--->Microsoft--->Microsoft Office Tiils--->Microsoft Office 2007 Language Settings என்பதை சொடுக்கவும்.
அப்பொழுது தோன்றும் சாளரத்தில் Display Languages என்பதில் Set the Microsoft Office display language to match the Windows display language என்பதை சரியிட்டு தெரிவுசெய்தபின், Display Microsoft Office menus and dialog boxes in: என்பதில் தமிழையும், Display Help in: என்பதிலும் தமிழையும் தெரிவு செய்து OK பொத்தானை அழுத்தி சாளரத்தை மூடவும்.
(மொழி தெரிவு நிலையில்)
(தமிழ்மொழி தெரிவு செய்யப்பட்ட நிலையில்)
பின் கணனியை மீள் ஆரம்பித்து Ms Office மென்பொருளினை இயக்கினால் அதன் இடை முகம் தமிழில் தோன்றும். (MS Office Word ன் தமிழ் இடைமுகத் தோற்றம்)
MS Office Word தமிழ் சொல் சரிபார்ப்பு, தமிழ் அகராதி சேவை போன்றனவும் இம் மொழிப்பொதி மூலம் கிடைக்கிறது. (Ms Wordல் மொழி சரிபார்ப்பு நிலைத் தோற்றம்)
உங்கள் கருத்துக்கள், சந்தேகங்களை பின்னூட்டமாக இடுங்கள்.
4 Comments
hai
ReplyDeleteநல்ல பதிவு நண்பா நன்றி mullaimukaam.blogspot.com
ReplyDeleteநன்றி JKR, தங்கள் வருகைக்கு....
ReplyDeleteஹாலோ சார் வணக்கம் நிரையபேர் சந்தேகங்களை
ReplyDeleteபோக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி
எனக்கும் ஒரு சந்தேகம்
வேர்டில் தமிழிழ் டைப் செய்யும் போது
தானாகேவே பான்டு மாறிக்கொள்கிறது
அதர்க்கு என்ன செய்வது