Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

PHP யில் பயன்படுத்தப்படும் குறியீடுகள்.PHP பகுதி-2

இணைப்பி-Concatenation (.) இரண்டுக்கு மேற்பட்ட மாறிகளையோ அல்லது மாறியுடன் ஓர் வசனத்தையோ இணைக்க பயன்படும் புள்ளி (.) இணைப்பி(Concatenation) எனப்படும். உதாரணமாக $a=தமிழ்; $b=வணக்கம்; என இரு மாறிகளாயின், எமக்கு வெளியீடாக “தமிழ் வணக்கம்” என வேண்டுமெனில், echo $a.$b; என வழங்கப்பட வேண்டும். அல்லது எமக்கு வெளியீடாக ஒருவரின் பெயருடன் வணக்கம் என்பது வரவேண்டுமெனில், echo $b.”நிலவன்”; என வழங்கினால் “வணக்கம் நிலவன்” என வெளியீடு பெறப்படும். PHP பரிசோதனை நிரல்-4
PHP பரிசோதனை நிரல்-5
கருத்திடல்-Comments(//) (/*------*/) நாம் ஒரு PHP நிரல் எழுதும் போது நிரலின் இடையே வெளியீட்டில் தெரியாமல் ஏதேனும் குறிப்புக்களை இட்டு வைக்க வேண்டுமெனில் இக்கருத்திடலை பயன்படுத்தலாம். ஒற்றை வரி கருத்திடல் எனின் அவ்வரிக்கு முன் இரட்டை சாய்கோடுகளும், பல வரிகள் கொண்ட கருத்திடல் எனின் ஒருசாய்கோடு ஒருஉடுக்குறி(/*) இட்டு ஆரம்பித்து பின் கருத்தினை இட்டு ஒருஉடுக்குறி ஒருசாய்கோடு என கருத்திடல் முடிக்கப்பட வேண்டும். PHP பரிசோதனை நிரல்-6
PHP பரிசோதனை நிரல்-7
PHP யில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் 1.எண்கணித குறிகள்-Arithmetic Operators (i) [+] கூட்டல்குறி-Addition உ+ம்:- $a=2; $b=$a+3; (ii) [-] கழித்தல் குறி-Subtraction உ+ம்:- $a=5; $b=$a-2; (iii) [*] பெருக்கல் குறி-Multiplication உ+ம்:- $a=2; $b=$a*4; (iv) [/] வகுத்தல் குறி-Division உ+ம்:- $a=8; ‘ $b=$a/2; (v) [%] ஈவு-Modulus உ+ம்:- $a=5; `` $b=$a%3; ஈவு என்பது வகுக்கும் போது வரும் மீதி ஆகும். உதாரணமாக 5இனை 3இனால் வகுக்கும் போது கிடைக்கும் மீதி 2ஆகும். இது ஈவு எனப்படும். (vi) [++] அதிகரித்தற் குறி-Increment உ+ம்:- $a=2; $a++; (vii) [--] குறைத்தற்குறி-Decrement உ+ம்:- $a=20; $a--; 2.ஒப்படைப்பு குறிகள்-Assignment Operators (i) [=] $x=$y (ii) [+=] $x+=$y இது $x=$x+$y என்பதற்கு சமனாகும். (iii) [+=] $x-=$y இது $x=$x-$y என்பதற்கு சமனாகும். (iv) [+=] $x*=$y இது $x=$x*$y என்பதற்கு சமனாகும். (v) [/=] $x/=$y இது $x=$x/$y என்பதற்கு சமனாகும். (vi) [%=] $x%=$y இது $x=$x%$y என்பதற்கு சமனாகும். (vii) [.=] $x.=$y இது $x=$x.$y என்பதற்கு சமனாகும். 3.தொடர்புக் குறிகள்-Relational Operators (i) [==] சமன் எனில் (ii) [!=] சமனன்று எனில் (iii) [>] பெரிது எனில் (iv) [<] சிறிது எனில் (iv) [>=] பெரிதோ சமன் எனில் (v) [<=] சிறிதோ சமன் எனில் 4.தர்க்கக் குறிகள்-Logical Operators (i) [&&] AND -உடன்குறி உ+ம்:- $x=6; $y=4; (x<10>2) (ii) [||] OR -அல்லது உ+ம்:- $x=6; $y=4; (x==5||y==5) உ+ம்:- $x=6; $y=4; (x==6||y==4) (iii) [!] NOT-அன்று/இல்லை உ+ம்:- $x=6; $y=4; !(x==y)

Post a Comment

1 Comments

  1. ப‌ல‌ க‌ணினி மொழிக‌ளை வெறும‌னே என்னை மாதிரி ப‌டித்திருந்தால் புரிந்துகொள்வ‌தில் ஒன்றும் பிர‌ச்ச‌னை இருக்காது.

    ReplyDelete

Followers

ADD2

Recent Comments